ஆபிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள நாடு கொமொரொஸ். இந்தியப் பெருங்கடலின் மொசாம்பிக் கால்வாயின் வடக்கு முனையில் மடகஸ்கர், அருகில் இந்தப் பகுதி உள்ளது.
கிராண்ட் கொமொர், மொஹெலி, அஞ்சோவாள் ஆகிய மூன்று தீவுகளை உள்ளடக்கியவைதான் இந்த நாடு. இதில், அதிகமாக வசிப்பவர்கள் மொரொனியிஸ்தானியர். ‘கொமொரொக்கள்’ என இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆறாம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவுடனான வணிகம் நடைபெற்றுள்ளது. இங்கு சுமார் 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே எரிமலைகள் காலம் காலமாய் வெடித்து ஓய்ந்துவிட்டன. இன்றோ பசுமையான காடுகள்- பவளப் பாறைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் நடைப் பயணம், ஸ்நோர்கெலிங், டைவிங் ஆகியவற்றுக்குப் பிரபலமான இடம். இங்கு இன்றும் நீரில் மூழ்கியுள்ள எரிமலை உள்ளது.
இது முஸ்லிம் குடியரசாகும். அரபு லீக்கிலும் இணைந்துள்ளது. குறிப்பாக இந்த நாட்டில் இன்றும் 250-க்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர்.
இங்கு இயற்கையாகவே வாசனைத் தாவரங்கள் நிறைய வளர்கின்றன. அதனால் இந்தப் பகுதிக்கு மனக்கும் தீவுகள் எனப் பெயருண்டு, மசாலா பொருட்கள், கிராம்பு வளர்கின்றன.
இங்கு பல வகையான திமிங்கிலங்கள், கடல் பச்சை ஆமைகள், கடற்பாசி, வௌவால்கள், 750-க்கும் மேற் பட்ட கடல் மீன்கள், எட்டு கடல் பாம்பு இனங்கள், கண்களைக் கவரும் பாறைகள், கிரிஸ்டல் கடற்கரைகள், நீர், விளிம்புப் பாறைகள் எனப் பார்க்க ஏராளம் உண்டு, இருப்பினும். இங்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது.