ஐரோப்பா கண்டத்தில் உள்ள, நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டம் புறநகர் பகுதியில், பல சாதாரண குடியிருப்புகளுக்கு இடையே பந்து போன்ற, கோள வடிவ வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இவை, ஒரே இடத்தில் கூட்டமாக அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
டச்சு நாட்டு கலைஞர் மற்றும் சிற்பியுமான டிரெஸ்க் ரெயிச்கம்ப் என்பவரின் கற்பனையில் உதித்த, நூதன கோள வடிவ வீடுகள் தான் இவை. பார்ப்பதற்கு கொல்ப் விளையாட்டு பந்து போல காட்சியளித்தாலும், சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 50 வீடுகளும் கட்டி முடித்து, பல வருடங்களானாலும் மெருகு குலையாமல் அப்படியே காட்சி தருகிறது. கட்டிய தினத்திலிருந்து வெறுமையாக இருந்ததில்லையாம் இவ்வீடுகள். சுற்றுலா பயணியர் மட்டுமின்றி, உள்ளூர்வாசிகளும் நிறைய பேர் இங்கு தங்கிச் செல்கின்றனர்.