எமது இலங்கை தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் திரைப்படைப்பு “மழைக்கால இரவுகள்”. ஓரங்கம் / ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுகந்தினி ரமணதாஸ் தயாரித்திருக்கும் 23 நிமிடங்கள் கொண்ட குறும் திரைப்படைப்பு இந்த மழைக்கால இரவுகள். இப்படைப்பினை இயக்குனர் சுகிர்தன் கிறிஸ்துராஜா இயக்கியிருக்கின்றார். நடிகர்களாக ஜொனி அன்ரன், யாழரசி கிறிஸ்துராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்திருந்த நிலையில் இப்படைப்பானது சர்வதேசம் முழுவதுமாக பல்வேறு நாடுகளில் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு 20ற்கும் அதிகமாக விருதுகளை பெற்ற வெற்றிப்படைப்பாக மாறியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து இப்படைப்பானது பிரான்ஸ் நகரத்தில் பாரிஸ் நகரில் கலைஞர்களுக்காக திரையிடப்பட்ட நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் திரைக்குழு அறியத்தருகின்றனர். அடுத்ததாக இப்படைப்பு தாயகத்தில் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் 15.12.2025 அன்று இலவச காட்சியாக மக்கள் அனைவருக்குமாக திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16.12.2024 நோர்வேயில், ஒஸ்லோ நகரத்தில் Sted: Frogner Kultursenter (Adresse: Trondheimsveien 362, 2016 Frogner) இப்படைப்பு திரையிடப்பட்டது. இப்படி ஒவ்வொரு நாடுகளாக வலம்வரும் இந்த திரைப்படமானது காதல் கலந்த மாறன் – மற்றும் வானிலாவிற்கான காவிய கதையாக இருப்பதனால் தான் இந்த படைப்பை விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது என எண்ணலாம். அடுத்ததாக இயக்குனர் சுகிர்தன் இயக்கவிருக்கும் ழுமுநீளத்திரைப்படத்திற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்த மழைக்கால இரவுகள் என்ற படைப்பு தான் தனது முழுநீளத்திரைப்படத்தை ஆரம்பிப்பதற்கான ஆணி வேராதிகழ்வதாகவும் அவர் கூறினார். அதனாலேயே இப்படைப்பை அனைவருக்கும் திரையரங்கில் பார்க்கக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றோம் எனவும் திரைக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
மனச்சுமைகளை தீண்டிச் செல்லும் “மழைக்கால இரவுகள்”
11