பூமி நாட்டை ஆண்டார் அறிவார்ந்த மன்னர் ராஜவர்மன்.
அண்டை நாட்டில் புதிதாக முடிசூட்டிய நன்னன், நாடு பிடிக்கும் ஆசையில் பூமி நாடு மீது படையெடுக்க, ஓலை அனுப்பினான்.
சபையை கூட்டி ஆலோசனை செய்தார் பூமி நாட்டு மன்னர்.
‘போர் புரிந்தால் இருபக்கமும், உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படும். முடிவில் வெற்றி உங்களுக்கே கிடைக்கும். எனவே, நாட்டின் ஒரு பகுதியை, தங்களுக்கு விட்டுக் கொடுக்கிறேன்…’ என பதில் அனுப்பினார்.
‘மன்னர் ராஜவர்மன் கூறுவதும் சரி தான்…’
பூமி நாட்டின் வடக்கு பகுதியை பெற்றதும், போர் எண்ணத்தை மறந்தான் நன்னன்.
ராஜவர்மனை சந்தித்து, ‘நாட்டின் ஒரு பகுதியை நன்னனுக்கு வழங்கியது, தங்கள் புகழுக்கு களங்கம் தானே…’ என்று கேட்டார் மகாராணி.
புன்னகைத்தபடியே, ‘அப்படித்தான் எல்லோருக்கும் தெரியும். நான் நன்னனுக்கு அளித்தது, வறண்ட பூமியின் ஒரு பகுதி. எப்படியும் அவன் அந்த பகுதியை வளப்படுத்துவான். அதனால் நமக்கு பளு குறையும். அத்துடன் போர் வெறிக்கு அப்பாவி வீரர்கள் பலியாவது தடுக்கப்பட்டுள்ளதே…’ என்றார் மன்னர். மன்னரின் இராஜதந்திரத்தை நினைத்து, மகிழ்ந்தார் மகாராணி.
பிள்ளைகளே! போர், பகை, அச்சம் நீக்கும் எந்த செயலும் நன்மை பயக்கும்!