பவி வித்தியா புரடக்சன் கிரி தயாரிப்பில், E.இப்ராஹிம் இயக்கத்தில், Dr.வித்யா பிரதீப் , ரிஷி ரித்விக், பேரரசு, கிரிபாபு, நாஞ்சில் சம்பத், டாணியல், ராஜ்குமார், அஸ்மிதா மற்றும் பலர் நடிப்பில் “திரும்பிப்பார்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தில் தேவ் குரு இசையில், வேல்முருகன் பாடிய “கண்ணத்தொறந்ததும் சாமி” பாடல் இசை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டினைப் பெற்றுள்ளது.
இந்தப்பாடலை எழுதியுள்ளார் பாடலாசிரியர் கவிஞர், பொத்துவில் அஸ்மின்.
“நான்” படத்தில் ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’, “அமரகாவியம்” படத்தில் ‘தாகம் தீர கானல் நீரை’, “சும்மாவே ஆடுவோம்” படத்தில் ‘முத்து முத்து கருவாயா’, “இது கதையல்ல நிஜம்” படத்தில் “சண்டாளனே ஏதோ” ஆகுறனே’, “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” , “முட்டக்கண்ணி” போன்ற பல வெற்றிப்பாடல்களை இவர் ஏற்கனவே எழுதியுள்ளார்.
படத்தின் பேருக்கு ஏற்றார் போல் திரும்பி திரும்பி கேட்க வைக்கிறது பொத்துவில் அஸ்மின் எழுதிய பாடல்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது…
இந்தப்பாடலின் வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். எனக்கும் என் பட குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
“நான் பாடல் எழுத ஆரம்பித்து 12 ஆண்டுகள் கடந்து விட்டன. தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி சார்தான் என்னை பாடலாசிரியராக அறிமுகம் செய்தார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் எழுதிய “வானே இடிந்ததம்மா” இரங்கல் பாடல் அவரது சமாதியில் தொடர்சியாக இரண்டு மாதங்கள் ஒலித்தது.
“ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” தனிப்பாடல் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உலகத்தமிழர்களின் கவனத்தை பெற்றது.
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “ஜமீலா”, DD பொதிகையில் ஒளிபரப்பாகிவரும் “தாயம்மா குடும்பத்தார்” ஆகிய நெடுந்தொடர்களுக்கும் நான் தலைப்புப் பாடல் எழுதியுள்ளேன்.
நான் எழுதிய விசுவாசம், அண்ணாத்த,கோச்சடையான் திரைப்படங்களின் புரோமோ பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றன.
தமிழின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் அனைவரோடும் இணைந்து பணிபுரிய காத்திருக்கிறேன்.
எனக்கு வாய்ப்பினை வழங்கிய இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
காற்றில் சருகாக அள்ளுண்டு போகாமல் கவியரசு கண்ணதாசன் , வைரமுத்துப் போல் காலம் கடந்து நிற்கும் பாடல்களை தரவேண்டும் என்பதே என் எதிர்ப்பாகும்.”என்று அஸ்மின் குறிப்பிட்டார்.