மலையக கல்வி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டாளர் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் நடேசன் தலைமையில் கண்டி நகரிலுள்ள இரு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டது.
கண்டி விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்திலும் மற்றும் கண்டி இந்து சீனியர் கல்லூரியிலும் அவை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
கண்டி மலையக கல்வி அபிவிருத்தி அறக்கட்டளையின் இணைப்பாளரும் கண்டி விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபருமான எஸ். சிவஞானசுந்தரம் மற்றும் கண்டி இந்து சீனியர் கல்லூரி அதிபர் சிவகுமார் ஆகியோரின் வழிகாட்டலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்த ஏ. எம். எஸ். பி. விவேகானந்தன், இந்தியா நாட்டைச் சேர்ந்த பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விசேட விருந்தினர்களாக தேசமானிய பழனியப்பன், தொழிலதிபர் வி. நடராஜா, முன்னாள் இந்து இளைஞர் மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியம், தேசமானிய எஸ். பரமேஸ்வரன், தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் குமாரதாஸ் முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் என். லோகநாதன், ஏ. தட்சணாமூர்த்தி தேசமானிய சந்திரவதனா ரட்ண ராஜ குருக்கள் மற்றும் கல்வி வலய உதவிப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி