நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜெயராம், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவின் 44-வது படமான இதன் படப்பிடிப்பு அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் ஊட்டியில் நடைபெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தில் தனது காட்சிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் பூஜா ஹெக்டே. இதற்காகப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதை தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா, இந்தப் படத்தை முடித்துவிட்டு ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
பூஜா ஹெக்டே
122
previous post