Home » 200 நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட முட்டக்கண்ணி ஆல்பம்

200 நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட முட்டக்கண்ணி ஆல்பம்

by Damith Pushpika
May 5, 2024 6:09 am 0 comment

தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்தேவா இசையில் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய முட்டக்கண்ணி ஆல்ப பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை ஜேர்மனியை சேர்ந்த பாடகர் முல்லைசசி பாடியுள்ளார்.

பாடலில் நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர், காயத்ரி சான் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ஆர்யா, சாம், பரத், சாந்தனு பாக்கியராஜ், ஜோன் விஜய், சினேகா, சங்கீதா உட்பட ஏராளமான தமிழ் சினிமா கலைஞர்களுடன் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ எம்.சரவணன், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் உட்பட 25 நாடுகளில் உள்ள 200 நட்சத்திரங்கள், இப்பாடலை வெளியிட்டுவைத்துள்ளனர்.

விஜய் ஆண்டனியின் நான் திரைப்படத்தில் இடம்பெற்ற “தப்பெல்லாம் தப்பே இல்லை” பாடலின் ஊடாக தமிழ் சினிமாவில் நுழைந்து “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” பாடலின் ஊடாக உலகத் தமிழர்களின் உள்ளங்களை கவர்ந்த பொத்துவில் அஸ்மினின் “முட்டக் கண்ணி” பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division