இலங்கை உட்பட ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக பணியாற்றுவதற்கு விமானம் ஒன்றை வழங்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதி) பிரதி செயலாளர் Michelle Chan இதற்கான இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த Michelle Chan, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவை சந்தித்த போதே இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக Michelle Chan மேலும் குறிப்பிட்டுள்ளார்.