Home » ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை

by Damith Pushpika
April 28, 2024 7:00 am 0 comment

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா அடுத்த மாதத்தின் முதல் வாரம் இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது அவர் கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன், இரு தரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் தொடர்பாகவும் கலந்துரையாட எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division