Home » எகிப்திலிருந்து பெரிய வெங்காய இறக்குமதி

எகிப்திலிருந்து பெரிய வெங்காய இறக்குமதி

தூதுவருடன் வர்த்தக அமைச்சர் பேச்சு

by Damith Pushpika
April 28, 2024 7:30 am 0 comment

எகிப்திலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் நேற்று முன்தினம் (26) நடத்தப்பட்ட விசேட சந்திப்பிலேயே இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, எகிப்திலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி இரு தரப்பினராலும் ஆராயப்பட்டுள்ளது.

பெரிய வெங்காய இறக்குமதி தொடர்பில் தூதுவர் சாதகமாக பதிலளித்துள்ளார்.

மேலும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இலங்கை – எகிப்து ஒத்துழைப்பு மாநாடு (JCTEC), இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள முதலீடு, வர்த்தக உறவுகள் மற்றும் எடுக்கப்படவிருக்கும் நிலையான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division