Home » இரு ஹீரோக்களுடன் அயோத்தி நாயகி

இரு ஹீரோக்களுடன் அயோத்தி நாயகி

by Damith Pushpika
April 28, 2024 6:00 am 0 comment

‘அயோத்தி’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை அடுத்தடுத்து இரண்டு இளம் ஹீரோக்கள் படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்தப் படம் வசூலிலும் சக்கை போடு போட்டது என்பது தெரிந்தது. மேலும் இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பம் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி என்பவர் அடுத்தடுத்து இரண்டு இளம் தமிழ் ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும், அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.‘அயோத்தி’ நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று கவின் நடிப்பில் சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் படம் என்றும், இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பிரீத்தி அஸ்ரானிக்கு ஒரு ஜாலியான கேரக்டர் என்றும் ‘அயோத்தி’ படத்தில் நடித்த கேரக்டரில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது என்றும் இந்த படம் ஒரு நல்ல என்டர்டைனிங் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ’ஜோ’ படத்தில் நடித்த ரியோ ராஜ் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ப்ரீத்தி அஸ்ரானி ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் இந்த படத்திலும் அவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் அளவுக்கு பவர்ஃபுல் கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.‘அயோத்தி’ படத்தை இயக்கிய மந்திரமூர்த்திக்கு இன்னும் அடுத்த படம் கிடைக்காத நிலையில் அதில் நடித்த நாயகிக்கு இரண்டு படங்கள் அதுவும் சூப்பர் ஹிட் கொடுத்த இளம் நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division