Home » புதைந்த இரகசியங்கள்..

புதைந்த இரகசியங்கள்..

by Damith Pushpika
April 21, 2024 6:33 am 0 comment

நீங்கள் சொல்கிறீர்கள்
நான் சொல்லாதிருக்கிறேன்
நீங்கள் விமர்சிக்கிறீர்கள்
நான் மௌனம் கொள்கிறேன்

நீங்கள் அழுகிறீர்கள்
நான் இதயத்தினுள்ளே காய்கிறேன்

நீங்கள் சொப்பனம் காண்கிறீர்கள்
நான் உறக்கத்திலும்
உணர்வோடிருக்கிறேன்

நீங்கள் புகழ்வதைப் புகழென்று
நினைக்க
நான் அமைதியைப்
பலமென்று நினைக்கிறேன்

எனது பாதை எனக்கானது
உமது பாதை உமக்கானது

இருத்தலின் சாட்சியாக
எனக்கும் உங்களுக்கும்
வித்தியாசங்கள் பல

சுட்டெரிக்கும் வெயிலுக்கு
சொகுசுக்குடையில்
இளநீர் குடிக்கும் நீங்கள்
ஆகாயக்குடையின் கீழ்
நிழலைத் தேடுமென்னை
அறிந்திருக்கக் கூடுமா?

விதைத்து விட்டு
மழைக்காகக் காத்திருக்கும்
ஏழை நான் விட்டேத்தியாக
இருப்பது நீங்கள்தான்

விபரிக்க வேண்டும்
என்று அவசியமில்லை
பரபரக்கும் பழக்கமும் எனக்கில்லை

பேசிப்பேசிக் கொல்வதை விட
அமைதியில் சிறு நிம்மதி
கொடுக்க முயற்சிக்கலாம்

ஒவ்வொரு காலமும்
ஒவ்வொரு ஞாபகங்கள்
ஒவ்வொரு நொடியும்
பலப்பல யாகங்கள்

அதையெல்லாம் அவசியமின்றி
அம்பலப்படுத்த முடியாமல் நான்
அதீதங்களின் பிடியில்
அநாவசியங்களின் கொடியுடன் நீங்கள்

அவரவர்க்குள் புதைந்த இரகசியங்கள்
அவரவர்க்குள் மாத்திரம்
இருக்கட்டும்

அவரவர்க்கான வேதனைகளும்
சுகமான நொடிகளும்
உள்ளார்ந்து நினைந்து
கொள்ளப்படுவதே
போதுமானது

கல்லெறிகளை
முதலில் நிறுத்துங்கள்
கழிம்பு தரத் தேவையில்லை
காயங்கள் தானாக ஆகும்.

- Dr ஜலீலா முஸம்மில் ஏறாவூர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division