Home » நீலங்களின் சமர்
வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த

நீலங்களின் சமர்

உலகின் மிக நீண்ட இடைவிடாத கிரிக்கெட் தொடர்

by Damith Pushpika
March 10, 2024 6:19 am 0 comment

1837ஆம் ஆண்டில், ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்கள் இங்கிலாந்தின் முதன்முறையாக நீலங்களின் சமர் என்ற பெயரில் ஒன்றுடன் ஒன்று விளையாடின. முதலாம் உலகப் போரின் போது இந்தக் கிரிக்ெகட் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

ஆனால் கொழும்பு ​ேராயல் கல்லூரி மற்றும் பரிதோமாவின் கல்லூரிகளுக்கு இடையிலான நீலங்களின் சமர் அற்புதமான வரலாற்றைக் கொண்டுள்ளது, 1879 இல் கொழும்பு அகாடமி (பிற்காலத்தில் ரோயல் கல்லூரி) மற்றும் முகத்துவாரத்தில் அமைந்திருந்த பரி.தோமாவின் கல்லூரி என்பனவற்றுக்கு இடையிலான கிரிக்ெகட் போட்டி முதலில் நடத்தப்பட்டது. ஆஷ்லே ​ேவாக்கர் கொழும்பு அகாடமியின் தலைவராக இருந்தார். ஆனால் இந்தப் போட்டியில் ஆசிரியர்களும் பங்கேற்றதால் இது ஒரு போட்டியாகக் கருதப்படவில்லை.

1880 ஆம் ஆண்டில், மாணவர்கள் இவற்றில் கலந்து கொண்டனர், கொழும்பு அகாடமி மற்றும் முகத்துவாரம் பரி.தோமாவின் கல்லூரி என்பனவற்றுக்கு இடையேயான முதல் உத்தியோகபூர்வ போட்டி (கல்கிசைக்கு மாறுவதற்கு முன்பு) காலி முகத்திடல் மைதானத்தில் நடைபெற்றது. கொழும்பு அகாடமியின் தலைவராக ஜே.டபிள்யூ. டி சில்வாவும், தோமியன் தலைவராக எப்.டபிள்யூ. மெக்டொனல் இருந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் மோதலில் கொழும்பு அகாடமி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1881 இல் கொழும்பு அகாடமி அதன் பெயரை ரோயல் கல்லூரி என்று மாற்றியது. ஆரம்ப காலத்தில் பாடசாலை அதிபர்கள் நடுவர்களாக இருந்தனர்.

பரிதோமாவின் படையணி சில கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கியது. அவர்கள் டி.எஸ். சேனாநாயக்க (இலங்கையின் முன்னாள் பிரதமர்), டட்லி சேனநாயக்க (இலங்கையின் முன்னாள் பிரதமர்), மைக்கேல் திசேரா (14 வயதில் தனது முதல் போட்டியில் விளையாடினார் மற்றும் 1957/58 இல் அணியின் தலைவராக இருந்தார்). அதனைத் தொடர்ந்து சிலோன் அணிக்கு மைக்கேல் தலைமை தாங்கினார். ஏனைய நட்சத்திரங்கள் அனுர தென்னக்கோன் (இலங்கை அணித் தலைவர் ), பிராட்மன் வீரக்கோன், லெப்டினன்ட் கேணல் எஸ். சரவணமுத்து, துலீப் மெண்டிஸ் (இலங்கை அணித் தலைவர்), கை டி அல்விஸ், பி. சரவணமுத்து, ரணில் அபேநாயக்க, சாந்த கோட்டேகொட (இராணுவத் தளபதி) மற்றும் ஜீவன் மெண்டிஸ்.

வெர்னான் பிரின்ஸ் இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார், இவர் முதல்தர போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக இருந்தார். பிரின்ஸ், கல்கிசையில் உள்ள பரி.தோமாவின் கல்லூரியில் பயின்றார், அங்கு அவர் பல வருடங்கள் முதல் XI அணிக்காக விளையாடினார், 1942_ -1943 இல் அணியின் தலைவராக இருந்தார்.

​ேராயல் கல்லூரியும் பல பிரபல கிரிக்ெகட் ஜாம்பவான்களைத் தந்தது

அவர்கள் ஜே.ஆர். ஜெயவர்தன (இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி). அவர் கிரிக்ெகட் விளையாட்டில் சிறந்து விளங்கினார், கல்லூரி கிரிக்கெட் அணிக்காக விளையாடினார், 1925 இல் ரோயல் – _ பரி.தோமாவின் தொடரில் அறிமுகமானார். சேர் ஜோன் கொத்தலாவல (இலங்கையின் முன்னாள் பிரதமர்) கொழும்பு ரோயல் கல்லூரியில் பயின்றார், ரோயல்- _ பரி தோமா கிரிக்ெகட் போட்டிகளில் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

பெர்ட்ராம். ஆர். ஹெய்ன் (இராணுவத் தளபதி) மற்றொரு பிரபல கிரிக்கெட் வீரர். அவர் ​ேராயல் கல்லூரியில் கிரிக்கெட் அணிக்காக விளையாடினார், 1930 இல் அறிமுகமானார் மற்றும்ரோயல்- பரி.தோமா போட்டிகளில் விளையாடினார். அவர் சிலோன் கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். சேர் டொனால்ட் பிராட்மனை கொழும்பில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஆல்-சிலோன் ஒரு நாள் போட்டியில் (1948) வெளியேற்றியது அவரது மிகவும் பிரபலமான சாதனையாகும்.

மற்ற ரோயலிஸ்ட்களில் சிலர் மேஜர் பெஞ்சமின். டபிள்யூ. பாவா (இலங்கையின் சொலிசிட்டர் ஜெனரல்), எம்.ஏ. மக்கான் மார்க்கர் – (இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் மருத்துவப் பேராசிரியர்) கேணல் ஃபிரெட்ரிக் டி சாரம் (ரோயல் கல்லூரிக்காகவும் விளையாடினார். பின்னர் ஒக்ஸ்போர்டில் நுழைந்து இங்கிலாந்து கவுண்டி சீசனில் 1000 ரன்கள் எடுத்தார்.) ரஞ்சன் மடுகல்ல- (இலங்கை கிரிக்கெட் வீரர் மற்றும் ஐசிசி போட்டி நடுவர்கள் குழுவின் தலைவர்), அசந்த டி மெல் (இலங்கை கிரிக்கெட் வீரர்) மற்றும் ஜெஹான் முபாரக் ஆகியோர் ரோயல் அணியை பிரபலப்படுத்தினர்.

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டு திறமைகளை வளர்ப்பது மட்டுமன்றி இலங்கை சமூகத்தில் உள்ளடங்கும் தன்மையையும் பன்முகத்தன்மையையும் ஊக்குவிக்கிறது. செழுமையான வரலாறு மற்றும் விளையாட்டின் மீதான நிலையான ஆர்வத்துடன், நீலங்களின் சமர் அழியாத முத்திரை பதித்துள்ளது.

இம்முறையும் ரோயல் மற்றும் பரி.தோமாவின் கல்லூரிக்கிடையிலான நீலங்களின் சமர் கடந்த வியாழனன்று எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பரி.தோமாவின் கல்லூரி அணி 88.2 ஓவர்கள் 297 ஓட்டங்களைப் பெற்றது, இரண்டாம் நாளன்று பதிலுக்குத் துடுப்பெடுத்தாமிய ரோயல் கல்லூரி அணி 278 ஓட்டங்களைப் பெற்றது. ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

ஸ்கோர் விபரம்

பரி. தோமாவின் கல்லூரி முதல் இன்னிங்ஸ் 297 (88.2 ஓவர்கள்)

ரோயல் கல்லூரி முதல் இன்னிங்ஸ் 278/9 (102.2 ஓவர்கள்)

பரி. தோமாவின் கல்லூரி இராண்டாம் இன்னிங்ஸ் 229/4 (86 ஓவர்கள்)

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division