இந்தத் தவக்காலத்தினை கடந்து செல்லும்போது நாம் ஆன்மிக ரீதியாக பலமடைய வேண்டும்.
வருடாந்த மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவரை நாட யாரும் விரும்புவது கிடையாது. நானும் அவ்வாறான விருப்பம் அற்றவனாயினும் இது அத்தியாவசியமானது என்று எனக்குத் தெரியும்.
முதலாவதாக இரத்தப் பரிசோதனைக்காக இரத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு உண்ணாமல் இருக்க வேண்டும். அதனை நான் செய்து முடித்து விட்டேன். இப்போது மருத்துவரை சந்திப்பதற்கான நாள் வந்துவிட்டது.
அவரை உரிய வேளையில் சந்திக்கும் நோக்குடன் நேரத்திற்கு முன்னதாக மருத்துவமனைக்கு சென்று விட்டேன்.
அப்போது தாதியர் அழைத்தனர். முதலில் எனது உடல் எடை பரீட்சிக்கப்பட்டது. குறித்த இயந்திரத்தில் நின்றபோது எனது எடை சற்று குறைந்துள்ளது என்றதும் நான் பிரார்த்தனையில் ஈடுபட்டேன். பின்னர் எனது இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.
தாதியர் அங்கிருந்து விலகிச் செல்லும்போது ‘மருத்துவர் உள்ளே வருவார்’என்றார். நான் காத்திருக்கின்றேன். மருத்துவர் உள்ளே வந்தபோது பரீட்சித்துப் பார்த்து எல்லாமே நன்றாகவுள்ளது என்று கூறிவிட்டு உடல் எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்தச் சொன்னார். அவ்வாறு செய்தால் அதை நீர் நன்றாக உணர்வீர். உமது இரத்த அழுத்தம் நன்றாக இருக்கும் உமக்கு நல்ல ஆற்றல்.இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவர் கூறுவதைச் செய்தால் நான் நன்றாக இருப்பேன் என்பதும் எனக்குத் தெரியும்.
இன்றைய நற்செய்தியானது இயேசுவின் தோற்ற மாற்றத்தைப் பற்றி பேசுகிறது. இந் நாளில் இயேசு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரது கண்களுக்கு முன்பாக உரு மாறினார். இங்கு இயேசு மட்டும் உரு மாறவில்லை. அவர்களும்தான் மாறினார்கள்.
இந்தத் தவக்காலத்தினை கடந்து செல்லும்போது நாம் ஆன்மிக ரீதியாக பலமடைய வேண்டும்.
இயேசுவின் அருகினில் வர நாம் எத்தகைய பாரத்தை, சுமையை, பாவத்தை விட்டுவிட வேண்டும்? இத்தவக்காலத்தில் மருத்துவரின் ஆலோசனைக்கமைய உடல் எடையை மட்டும் குறைப்பதோடு நின்றுவிடாமல் தெய்வீக மருத்துவராகிய இயேசுவைப் பின்பற்றவும் முடிவு செய்துவிட்டேன். இயேசு மலையில் தோற்றமாற்றம் பெற்றது போல் நானும் அவரைப் போல் மாற விரும்புகிறேன்.
-அருட்தந்தை நவாஜி (திருகோணமலை மறைமாவட்டம்)