Home » சிறந்த திரைக்கதைக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ள

சிறந்த திரைக்கதைக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ள

“19:53 - Lost in Language”

by Damith Pushpika
February 11, 2024 6:00 am 0 comment

ஜெர்மனிய அரசின் டார்ம்ஸ்டாட் பல்கலைக்கழக, – திரைப்படக் கல்லூரி மாணவர்களின் குறும்திரைப்படம் – “19:53 – Lost in Language” சிறந்த திரைக் கதைக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நாநலவுடைமை அந்நலம் யான்நலத்து உள்ளதூஉம் அன்று (குறள் : 641)

தனது சொந்த மொழியில் உரையாடும் சந்தர்ப்பம் மறுக்கப்படும்போது ஒரு மனிதனோ அல்லது ஒரு சமூகமோ எவ்வாறான சவால்களை சந்திக்கும் என்பதை விவரிக்கும் ஒரு குறுந் திரைப்படம்.

வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும், சொந்த நாட்டில் தாய்மொழியில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கும், இந்த திரைப்படத்தில் “சமத்” ஜெர்மன் மொழி தெரியாமல் ஜெர்மனியில் உயிராபத்தின்போது உதவி தேடும் தருணங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

அத்துடன் இது 1953 ஆம் ஆண்டு சிங்கள மொழி சட்டம் (Sinhala only act) தமிழ் பேசும் மக்கள்மீது ஏற்படுத்திய தாக்கத்தை இந்த குறுந் திரைப்படம் நினைவுபடுத்துகிறது. இந்த திரைப்படம் மொழித் தடைகளால் ஏற்படும் துன்பநிலைகளையும், அதனால் ஏற்படும் பிரிவினையையும் காட்சிப்படுத்த முயல்கிறது.

இந்த திரைப்படம் ஜெர்மனிய அரசின் டார்ம்ஸ்டாட் பல்கலைக்கழக – திரைப்பட கல்லூரியால் பகுதியாக தயாரிக்கப்படுகிறது. இதில் பங்குபெறும் பன்நாட்டைச் சேர்ந்த திரைத்துறை மாணவர்களும் கலைஞர்களும் தங்கள் உழைப்பை இலவசமாகவே வழங்குகின்றனர். இருப்பினும் தயாரிப்பு செலவுகளில் 800 அளவான பணம் தேவைப்படுகிறது.

இதற்காக ஒரு கூட்டு நிதிநல்கை (Crowd funding) தொடங்கப்பட்டுள்ளது. lostinlanguage.de என்ற இணையதளத்தில் உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.

பதுர்ஜன் விஜயசேகர மற்றும் குல்யா அமடோவா

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division