தை பிறந்தால் வழிபிறக்கும் தமிழர் அறிவரை. அதேபோல் தமிழர் பாரம்பரித்தை பரைசாற்றும் பண்டிகைகளில் தை பொங்கல் சிறப்பிடம் வகிக்கிற. அருகி வரும் பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பது எமது கடமையாகும்.
பொங்கலை பொதுவாக மண்பானையில் தான் சமைக்க வேண்டும். அது தான் தமிழரின் தொன்று தொட்டு வரும் வழக்கம். ஆனால் இன்று பலர் பொங்கல் தினத்தன்று பொங்கலை குக்கரில் சமைத்து கொண்டாடி வருகிறார்கள். இது வருங்கால தலைமுறையினருக்கு மண்பானையில் ஏன் பொங்கலை சமைக்க வேண்டும் என்று கற்று தர வேண்டிய காலம். மண்பானையில் பொங்கலை சமைப்பதால், மண்பானையின் நுண் துளைகளின் வழியாக நீராவியும் காற்றும் உணவின் மீது சீராகவும் மெதுவாகவும் பரவும், இதனால் சுத்தம் செய்யப்படாத அரிசி, காய்கறிகளாக இருந்தாலும் மண் பானையில் சமைக்கும் போது கிருமிகள் அழிந்து விடும். அடுப்பைவிட்டு இறக்கினாலும் சூடு ஆறாமல் அதன் தன்மை கெடாமல் பாதுகாக்கும். உணவின் சத்துகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு எளிதாகச் செரிமானமாகும், உடலுக்கு தரக்கூடிய அனைத்து பலத்தையும் மண்பானை பொங்கல் சேர்த்து விடும். பொங்கல் தினம் என்பது இயற்கையை வணங்கும் முறையாகும். மண்பானை என்பது இயற்கை தந்த வரமே. அதற்கு மனிதன் உருவம் கொடுக்கிறான் அவ்வளவே. ஆகையால் மண்பானையில் பொங்கலை வைத்து இயற்கையை வழிபடுவோம்.