200
வருக வருக புத்தாண்டே
வளங்கள் நிறைந்த புத்தாண்டாய்
தருக தருக புத்தாண்டே
தனமும் குணமும் தந்திடவா!
ஒருமைப் பாட்டில் உயர்ந்திடவா
ஒன்றே நிலமென உணர்ந்திடவா
பெருமை மிக்க இலங்கையாய்
பேரும் புகழும் பெற்றிடவா!
சத்தியம், சாந்தம் நிலைத்திடவா
சமத்துவம் எங்கும் நிலவிடவா
இத்தரை மாந்தர் என்றென்றும்
இன்புற்று மகிழ்ந்திட வா வா!
உண்மை, அன்பு, ஒழுக்கமென
உயரிய பண்புகள் அனைத்திலுமே
எண்ணம் உயர்ந்திட வா வா!
எல்லா நலனும் தா தா!