இந்தியாவின் முன்னணி நடிகரும் பாலிவுட் நடிகருமான அமிதாப் பச்சன் அவரது மகளுக்கு மிகவும் பிரம்மாண்டமான அவரது வீட்டை பரிசாக கொடுத்திருக்கிறார். எக்கசக்கமான சொத்துக்களை வைத்திருக்கும் இந்த நடிகர் தற்போது அவரது மகளுக்கு கொடுத்திருக்கும் பரிசு தான் பாலிவுட் வட்டாரத்தில் மிகப் பெரிய பேசு பொருளாக இருக்கிறது . அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு என தெரிந்தால் நாமும் அதைப்பற்றி தான் பேசுவோம்! அமிதாப் பச்சன் நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி, பாடகர், தொகுப்பாளர் என பன்முக வேலைகளை செய்துவரும் பன்முக திறமையான நபர். தற்போது அவர் அவரது குடும்பத்தோடு மும்பையில் இருக்கும் ஜூஹூ நகரில் உள்ள ஜல்சா பங்களாவில் குடியிருக்கிறார்.
ஹிந்தி சினிமாவில் பிரதானமாக நடித்து வரும் இவர், கிட்டத்தட்ட சினிமாவில் 50 வருடத்தை முடித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், தாதா சாஹேப் பால்கே உள்ளிட்ட இந்தியாவின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்றிருக்கிறார் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சனின் குடும்பம் மிகவும் பெரிய மற்றும் பிரபலமான குடும்பமாகும். அவரது மனைவி ஜெயா பச்சன், நடிகை மற்றும் எம்பி ஆவார். அவரது மகள் ஸ்வேதா பச்சன் எழுத்தாளராகும். மகன் அபிஷேக் பச்சன் நடிகர் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் நடிகை ஆகும்.இன்று பாலிவுட் வட்டாரமே மிகவும் பெரிய பேசு பொருளாக பேசி வருவது அமிதாப் பச்சன் அவரது மகளுக்கு அளித்திருக்கும் பரிசினை பற்றி தான். அமிதாப் பச்சன் அவருடைய பிரதிக்ஷா என்னும் ஜூஹூ பங்களாவை அவரது மகள் ஸ்வேதா நந்தாவுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். அவரது பெயரிலிருந்து இந்த பங்களாவை நேற்று ஸ்வேதா பெயருக்கு மாற்றி பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த பெயர் மாற்ற வேலையே கடந்த நவம்பர் 8ஆம் தேதியே தொடங்கி இருக்கிறாராம். பிரதிக்ஷா என்னும் ஆடம்பர பங்களாவின் மதிப்பு கிட்டத்தட்ட அரை நூறு கோடி ரூபாயை விட அதிகம் தான் என்கிறார்கள் பாலிவுட் வட்டாரங்கள்.