காலத்தின் பெறுமதி இன்றியமையாததாகும். உரிய நேர காலத்தில் நமது செயற்பாடுகளை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும்.
நேரத்தைக் கணிப்பிட்டு நாம் செயற்படாவிட்டால் எமது வாழ்வில் பிற்போக்கான நிலையே தொடர்ந்து கொண்டிருக்கும். அதைத் திட்டமிட்டு வகுத்துக் கொண்டால் அது எமது வெற்றிக்கு வழிகோலும்.
ஏதாவது ஒரு நடவடிக்ைகயாக இருந்தாலும் அதனை திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும். நாம் பாடசாலை மதரஸா நேரத்தைத் தவிர்த்து ஏனைய நேரத்தை விளையாட்டிலேயே கழிக்கிறோம். இரவில் மாத்திரம் தான் பாடம் படித்தல் குர்ஆன் வகுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம்.
பாடசாலைகளில் தரும் வீட்டு வேலைகள் ஏராளமாக இருந்தால் நள்ளிரவு வரை அதனைச் செய்து விட்டு நேரம் கடந்தே தூக்கத்திற்கு செல்ல நேரிடுகிறது. அதனால், காலையில் உரிய நேரத்தில் தூக்கத்திலிருந்து மீள முடிவதில்லை. ஆகையால், எமது கல்வி நடவடிக்ைககள் மாத்திரமல்லாமல் ஏனைய சகல நடவடிக்ைககளும் பாதிப்புக்குள்ளாகின்றன.
இப்போதிருந்தே நாம் எமது அன்றாட செயற்பாடுகளை ஒரு நேர சூசிப் படி அமைத்துக் கொள்ள ஆவன செய்ய வேண்டும். படிக்கும் நேரம், விளையாடும் நேரம் என்று ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் நேரம் ஒதுக்கி செய்து முடிக்க வேண்டும்.
அவ்வாறு கடைப்பிடிப்போமானால் நெருக்கடியின்றி உரிய முறையில் ஒவ்வொரு செயற்பாடுகளையும் மேற்கொண்டு வாழ்வில் வெற்றி காணலாம். ஆகவே, தம்பி தங்கைகளாகிய நாம் இன்றிலிருந்தே எமது செயற்பாடுகளை நேரசூசிப்படி அமைத்துக் கொள்ள முன்வருதல் வேண்டும்.