தமக்குள்ளே நம்பிக்ைகயும் அன்பும் இல்லாத காரணத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள். தெருவிலோ, அலுவலகத்திலோ, விமானத்திலோ, வேறெங்குமோ, எதைப் பார்த்தாலும் அவர்கள் அச்சமடைகிறார்கள். அச்சத்துக்குப் பின்னால் காரணமாக அமைவன மனிதனின் கொடூரத்தன்மையும் கருணையின்மையும் ஆகும். உங்கள் எண்ணம், சொல், செயல், ஒன்றாக இருக்குமானால் அஞ்சத் தேவையில்லை.
மனித குலத்துக்கு அணி செய்வது கல்வியே. கல்வியே, புகழ், செல்வம், சுகம். யார் மிகுந்த திருப்தியுடன் இருக்கிறானோ அவனே செல்வந்தன். ஆசைகள் மிகுந்தவனாக இருக்கிறானோ அவனே மிகுந்த ஏழை. நல்லதற்கு நன்மையும், தீயதற்கு தீமையும் கர்மத்தின் விளைவு. பொறாமையும், சினமும் கொண்டவர்கள் இருகாலமும் முன்னேறமுடியாது.
வாழ்க்ைக மிகவும் புனிதமானது. புனிதமான அத்தகைய வாழ்வை புனிதமானவற்றுக்காக வழங்குதல் வேண்டும். சத்தியம், தர்மம், சாந்தி என்ற இவையே அடிப்படையான கொள்கைகளாகும். இவற்றின் மூலம் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும். பற்றுதலே துன்பத்திற்குக் காரணம், சீலமில்லாத கல்வி, தியாகமில்லாத ஆராதனை, முயற்சியில்லாத செல்வம், கொள்கையற்ற அரசியல், இவ்வுலகத்தின் துன்பங்களுக்ெகல்லாம் காரணம். நமது நடத்தையும் எண்ணங்களுமே நமது இன்ப துன்பங்களுக்குக் காரணம். உங்களிடம் சுயநம்பிக்ைக இருந்தால் பிறர் குறைகூறுவதால் நீங்கள் பாதிக்கப்படமாட்டீர்கள். சுயநம்பிக்ைக இல்லாதவன் தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் பாதிக்கப்படுவான். கடவுள் அருள் மட்டும் இருக்குமானால் இந்த உலகத்தில் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. கலியுகத்தில் நட்பு நட்பாகவா இருக்கிறது. பையில் பணம் இருக்கிறது. தந்தை பதவியில் இருக்கிறார். அனைவரும் ஹலோ, ஹலோ என்று ஓடி வருவார்கள். அதே பணம் இல்லை என்றால் தந்தையும் ஓய்வுபெற்றுவிட்டார் என்றால், யாருமே வர மாட்டார்கள்.
பதவியாலும், பணத்தாலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் அகங்காரத்தால் தம்மை மறந்து செயல்படுகிறார்கள். அகங்காரம் மனிதனை இழிநிலைக்குத் தள்ளிவிடும். ஒவ்வொரு செயலுக்கும் பலன் நிச்சயம் ஏற்படும். சிலவற்றுக்கு உடனே கிடைக்கிறது. மற்றவைகளுக்கு சிலகாலம் பொறுத்துக் கிடைக்கும். விளைவுகள் இல்லை என்பது தவறு. நித்தியமான செல்வம் எது. அன்பு என்ற செல்வம்தான் அது. எந்த உயர் பதவி வகித்தும், எவ்வளவோ படித்தும் எத்தனையோ செல்வங்களைச் சேர்த்தும் என்ன பயன். இதயத்தில் இரக்கம் இன்றி வரண்டிருந்தால் அன்பை விட உலகில் விலை உயர்ந்தது வேறு எதுவும் கிடையாது.
மன நிறைவு அமைதியைத் தரும். திருப்தி இல்லாத ஒருவன் இரண்டு வகைகளிலும் நஷ்டம் அடைகிறான். அவனால் இவ்வுலகிலோ, மறுமையிலோ சந்தோஷமாக இருக்க முடியாது. நிலையற்ற எதிர்காலத்தைப் பற்றி யோசித்து அச்சத்தில் அழுகிறார்கள். நிலையற்ற எதிர்காலத்தைப் பற்றி யோசித்து நீ கவலைப்படவேண்டிய அவசியமென்ன? நடந்துபோனதைப் பற்றியும் நீ சிந்திக்க வேண்டியதில்லை. ஏனென்றால் கடந்தது கடந்ததுதான். அது திரும்பிவராது. நிகழ்காலத்தை நன்கு பயன்படுத்த நீ முயலவேண்டும். கடந்தவற்றின் விளைவுகளும், வரப்போகும் அறிகுறிகளும் நிகழ்காலத்தில் இருக்கின்றன. அதனால் நிகழ்காலம் எங்கும் நிரம்பிய காலம். இத்தகைய பல அறிவுரைகளை கலியுக அவதாரமாகிய பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா பல ஆண்டுகளாக இடைவிடாது உலகில் உள்ள மக்களுக்கு அருளியிருக்கிறார்.
சுவாமிநாதன் தர்மசீலன் (ஜே.பி)