பாலிவுட்டில் நன்றாக நடிக்கத் தெரிந்தவர் என பெயர் எடுத்தவர் வித்யா பாலன். தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதற்கு பெயர் போனவர். பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்ட வித்யா பாலனுக்கும், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் விமான நிலையத்திற்கு ஒரு சிறுமியுடன் வந்திருந்தார் வித்யா பாலன்.அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. வித்யா பாலனுடன் இருக்கும் சிறுமி அவரின் மகள் தான் என பலரும் பேசத் துவங்கினார்கள். சோஷியல் மீடியா காலத்தில் ஒரு மகள் இருப்பதை இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்த வித்யா பாலனை பாராட்டியே ஆக வேண்டும் என்றார்கள் நெட்டிசன்கள்.
மகள் இருப்பதை சொல்லாமல் விட்டுட்டீங்களே வித்யா என ரசிகர்கள் தெரிவித்தனர். ஆளாளுக்கு தன்னை பற்றி பேசுவதை பார்த்த வித்யா பாலன் விளக்கம் அளித்துள்ளார். விமான நிலையத்தில் தன்னுடன் இருந்த சிறுமி தன் மகள் இல்லை என்றும், சகோதரியின் மகள் என்றும் தெரிவித்துள்ளார். வைரல் வீடியோ பற்றி வித்யா பாலன் கூறியிருப்பதாவது, அது என் சகோதரியின் மகள் ஐரா. என் சகோதரிக்கு இரட்டை பிள்ளைகள் இருக்கிறார்கள். மகனின் பெயர் ரூஹான், மகள் ஐரா என்றார்.
தன் சகோதரியின் இரட்டை பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார் வித்யா பாலன். அப்படி இருக்கும்போது அவரை ஐராவுடன் பார்த்தவர்கள் வேறு மாதிரி பேசிவிட்டார்கள். கெரியரை பொறுத்தவரை நீயத் இந்தி படத்தில் துப்பறியும் நபராக நடித்திருந்தார் வித்யா பாலன். அது தான் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம். அடுத்ததாக வித்யா நடிப்பில் லவ்வர்ஸ் படம் வருகிறது. அந்த படத்தில் இலியானா, பிரதீக் காந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் வித்யா பாலன் அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். அநத் படத்தில் அஜித் குமாரின் மனைவியாக நடித்திருந்தார்.அஜித் குமார், வித்யா பாலன் இடையேயான கெமிஸ்ட்ரி தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் மீண்டும் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வித்யா பாலன். படப்பிடிப்பு துவங்கிய பிறகு அவருக்கு நடிக்கத் தெரியவில்லை என நீக்கிவிட்டு வேறு ஒரு ஹீரோயினை நடிக்க வைத்தார்கள். அதன் பிறகு பாலிவுட் சென்றார் வித்யா.தன்னை தமிழ் படத்தில் இருந்து நீக்கியதை வித்யா பாலன் இன்னும் மறக்கவில்லை. இதற்கிடையே நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி டர்ட்டி பிக்சரில் நடித்து பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார் வித்யா பாலன்.