பகல் நேரம் 2.45 வைத்தியசாலை அம்பியூலன்ஸ் மஹரகம அபேக்ஷா நோக்கி பயணிக்க தயார் நிலையில் இருந்தது. ஷஹ்மியும் அவனது தந்தையும் கண்ணீர் ததும்ப பெரும் கவலைகளைச் சுமந்தவர்களாக வைத்தியசாலையிலிருந்து விடைபெற ஆயத்தமானார்கள். ஆம். அன்றைய நாள், வைத்தியசாலை முழுக்க ஆரவாரமாகவே காணப்பட்டது. …
சிறுகதை
-
-
அமாவாசையை கடந்த இரண்டாம் நாள் கும்மிருட்டு. ஊரடங்கிய நிசப்தத்தில் ஒப்பாரிச் சத்தம் மூன்று தெருவை கடந்து வீடுவரை கேட்டது. சாமமாகியும் ஒருகண் தூக்கமின்றி புரண்டுகொண்டிருந்தேன். பக்கத்தில் தம்பி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். சிறுவயதிலிருந்தே மரணவீடுகளில் பாடும் ஒப்பாரியை கேட்டால் பேப்பயம் என்னை …
-
ரஷிதா பாய் தாமதமாகத்தான் விழித்தார். பேரன் ஹாரூனின் அழுகைச் சப்தம்தான் களைப்பான ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரை எழுப்பி விட்டது. நேற்று நோன்புப் பெருநாள் என்றதனால் நேற்றிரவு குடும்பம் சகிதம் ஈத் மீலன் (பெருநாள் சந்திப்பு) வைபவத்திற்கு சென்றிருந்தார்கள். அங்குதான் ரஷிதா …
-
ஞ்சனிக்கு இரண்டு தினங்களாக மனதில் புயலைக் கிளப்பி விட்டிருந்தது. எதுவும் அவளுக்குப் புலப்படவில்லை. மனம் தவித்தது. தன் கணவன் விக்கியிடம் கேட்டு குடும்ப உறவில் தேவையற்ற கீறலை ஏற்படுத்தவும் ரஞ்சினி விரும்பவில்லை. பேசாமல் அதை அதன் போக்கில் விடவும் அவள் மனது …
-
சுபஹூத் தொழுகைக்கான அதான் ஒலித்ததும் விழித்துக் கொண்டாள் சகீனா. கட்டிலிலிருந்து எழுந்து வர விருப்பமின்றிப் புரண்டு கொண்டிருந்தாள். நேரம் மெது மெதுவாக நகர்ந்து சென்றது.தொழ வேண்டும், சமைக்க வேண்டும் பரபரப்போடு எழுந்து உட்கார்ந்தாள். பின்னர்… வுழூச் செய்து சுபஹூத் தொழுகையைத் தொழுது …
-
அலுத்துக் களைத்து வீடு வந்து சேர்ந்தாள் சாகிரா. பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த மகள் சஹானா எழுந்தோடி வந்து கழுத்தில் தொங்கினாள். அள்ளியெடுத்து அவளுக்கு வாடிக்கையான முத்தத்தைக் கொடுத்துவிட்டு ‘வாப்பா எங்கும்மா?’ எனக்கேட்டாள். ‘தூங்குறாம்மா….. ஸ்….. சத்தம் போடாதீங்க…. எழும்பிடுவா…’ என்றாள் – …
-
மார்கழி தொடங்க இன்னும் சில நாட்களே இருந்தாலும் பனியின் ஆக்கிரமிப்பு அந்த வைகறைப் பொழுதில் அதிகமாகவே இருந்தது. பனிக்குளிரும் நடுநடுங்கச் செய்தது. அந்த அதிகாலைப் பொழுது இன்னும் கூட விடியாததுபோல காட்சியளித்தாலும் பொழுது புலர்ந்ததை சகாயமேரியின் வீட்டுக் குசினிக்குள் அடைபட்டிருந்த சேவல் …
-
தியா வேகமாக நடந்து கொண்டிருந்தாள். இதமாக வீசிக் கொண்டிருந்த காற்று குளிர் காற்றாக மாறியது. குளிர்காற்றாக மாறியதும் அல்லாமல் வேகமாகவும் வீசத் தொடங்கியது. பாதையின் இரு மருங்கிலும் இருந்த நிழல் தரும் மரங்களின் இலைகளையும் சருகுகளையும் காற்று சுழற்றியடித்தது. மழைதூரத் தொடங்கியது. …
-
அன்று மாலை ஆறு மணி போல் “ஆற்றுச்சேனை” கிராமத்தில் அந்த துயரமான செய்தி அங்குள்ள அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது. ‘சிவமணி செத்துப் போனாளாம்’. ஆளுக்காள் ஒரு மாதிரி பேசிக் கொண்டனர். ‘நல்ல குணமானவளப்பா சிவமணி. நல்லாத்தான் இருந்தாள். அவளுக்கு என்னவோ …
-
அவள் ஒரு பேரழகி. அவளது அழகுக்கிணையானது அவளுடைய நற்குணம். அவள் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அன்பே உருவான தேவதையாக வளர்ந்தாள். இஷ்தா எனும் இனிமையான நாமம் கொண்ட அவள் ஒரு அரசபள்ளி ஆசிரியை. இருபத்து மூன்று வயது நிரம்பிய இஷ்தா …