66
நீல நிறக் கடலில்
நீந்தும் பெரிய கப்பல்!
தொலைதூரம் போகும்
துடுப்பில்லாத கப்பல்!
சிறிய இரும்புக் குண்டும்
நீரில் மிதப்பதுண்டோ?
பெரிய இரும்புக் கப்பல்
மிதக்கும் மாயம் என்ன?
இரும்புக் குண்டு மூழ்கும்
இரும்பு ஏனம் மிதக்கும்
இரும்புக் கப்பல் நீரில்
மிதப்பதெப்படியாகும்!