65
‘கடல்’ கண் பார்வையினை கடந்து நிற்பது என்னும் பொருள் தரும். ‘கடல்’ எந்நேரமும் பேரிரைச்சல் இடுவது பற்றி ஆர்கலி, நரலை, குரவை, அழுவம் என்றும் பரந்திருப்பது பற்றி ‘பரவை’ என்றும் ஆழ்ந்திருப்பதால் ‘ஆழி’ என்றும் உப்பு நீருடையதால் ‘அளங்கர்’ பௌவம், உவரி என்றும் மழை முகிலை உண்டாக்குவதால், ‘கார்கோள்’ என்றும் மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் மூன்றுக்கும் காரணமாதலால் ‘முந்நீர் என்றும் வழங்கப்பெறும்.
தமிழ் மொழியின் சிறப்பினை விளக்க கடலுக்கு எத்துணை பெயர்கள்.
சாரணா கையூம்...