விஷால் தான் இயக்கி நடிக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்துக்காக, தானே நேரடியாக ஒடிஷன் செய்து துணை கதாபாத்திரங்களுக்கான நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார்.
நடிகர் விஷால், ஹரி இயக்கும் ‘ரத்னம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் 26-ம் திகதி வெளியாகிறது. இதையடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார், விஷால். மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது, விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தானே இயக்கப்போவதாக விஷால் அறிவித்தார்.
இப்போது அதன் பணிகளைத் தொடங்கியுள்ள விஷால், சமீபத்தில் அஜர்பைஜான், மால்டா போன்ற பகுதிகளில் லொகேஷன் பார்த்துவிட்டு வந்தார். முதல் பாகத்தில் நடித்த பிரசன்னா உட்பட சிலர் இதிலும் நடிக்கின்றனர். மற்றவர்களை ஆடிஷன் வைத்து தேர்வு செய்கின்றனர். வழக்கமாக , இணை மற்றும் உதவி இயக்குநர்கள் ஆடிஷன் செய்வது வழக்கம். இந்தப் படத்துக்காக நடிகர் விஷாலே, நேரடியாக ஆடிஷன் செய்து துணை கதாபாத்திரங்களுக்கான நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார்.