கோயம்புத்தூரில் 1893இல் மார்ச் மாதம் 23ஆம் திகதி நாயுடு பிறந்தார். இளம் வயதில் கல்வியில் நாட்டம் இல்லாத இவர், தனக்கு தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களை எல்லாம் வாங்கிப் படித்து தனது அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டார்.
இவர் ‘இந்தியாவின் எடிசன்’ என சிறப்பாக அழைக்கப்படுகின்றார். இவர் விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இவரால் கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள்:
1. உருளை கிழங்கு தோலுரிக்கும் கருவி
உருளைக் கிழங்கின் தோலை எடுப்பதற்கு அதிக நேரம் செலவாகும். ஜி.டி நாயுடு இக் கருவியினை 1940களிலேயே கண்டுபிடித்து விட்டார். இந்தக் கருவியானது உருளைக் கிழங்கின் தோலை மட்டும் தனியாக எடுத்து விடும்.
2. ஷேவிங் ரேசர்
இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் ஜி.டி. நாயுடு ஐரோப்பா சென்றார். அங்கு பிளேடுகளுக்கு பற்றாக்குறை நிலவியது. ஷேவிங்களுக்கு ஒரு பிளேட்டை மட்டும் பயன்படுத்த வேண்டிய நிலை. ஒரு வெதுப்பகத்திற்கு சென்றார் நாயுடு. அங்கு ரொட்டித் துண்டுகளை வித்தியாசமாக வெட்டுவதனைப் பார்த்தார். உடனே ஒரு பொம்மைக் காரை வாங்கி அதிலிருந்து மோட்டாரை மட்டும் கழற்றி பிளேட்டில் பயன்படுத்திப் பார்த்தார். அது பலனளித்தது. அவரது நண்பர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. இதற்கு ஐரோப்பாவில் காப்புரிமையும் பெற்றார். லண்டனில் விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலேயே 7500 ரேசர்கள் விற்பனை ஆகின.
3. சாவி கொடுக்கும் சுவர் கடிகாரம்
அக் காலத்தில் உள்ள சுவர் கடிகாரங்களுக்கு தினமும் சாவி கொடுக்க வேண்டும்.
1950இல் வாரத்தில் இரு முறை மட்டும் சாவி கொடுத்தால் இயங்கும் சுவர் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார்.
4. கட்டடக் கலவை
கட்டடங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக 1950ஆம் ஆண்டு அரிசி, உமி மற்றும் சீமெந்து என்பவற்றைக் கலந்து ஒரு கலவையை கலந்து உருவாக்கினார். கட்டடங்களுக்கு நல்ல வலுவை கொடுத்த அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
5. மின்சார மோட்டார்
1937இல் இந்தியாவில் முதன் முதலாக மின்சார மோட்டாரை ஜி.டி. நாயுடு கண்டுபிடித்தார். விவசாயம் மற்றும் தொழில்துறையினருக்கு இது மிகவும் பலனளித்தது.
6. தமிழ் டயல் வானொலி
தமிழ் டயல் வைத்த வானொலியை முதன் முதலில் அறிமும் செய்தவர் ஜி.டி. நாயுடு ஆவார்.
கு. அவினாஷ் - வத்தளை