சர்ச்சை பேச்சுகளால் சலனத்தை ஏற்படுத்துபவர் எனக்கு அவர்தான் குருன்னு டைரக்ஷனில் இறங்கிய விஷால். தமிழகத்திலும் சரி, தமிழ் சினிமாவிலும் சரி, இங்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக தனது கருத்தை பதிவு செய்து எப்போதுமே ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் இந்த கோலிவுட் அர்னால்டு. கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி வசூலில் 100 கோடியை தாண்டி சக்கை போடு போட்டது.
தளபதி விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்து அறிவிப்பை வெளியிட்ட போது ஆர்வக்கோளாறில் தானும் கட்சி தொடங்குவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார் விஷால். அது மட்டும் இன்றி விஜய்யை வைத்து படம் இயக்குவதை தனது வாழ்நாள் லட்சியமாகவும் மேற்கொண்டுள்ளார்.
விஷாலின் அதீத தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். இதன் முன்னேற்பாடாக 2017 விஷால் மட்டும் பிரசன்னா வித்தியாசமான கதைகளத்தில் நடித்து மிஷ்கின் இயக்கிய மாபெரும் வெற்றி படமான துப்பறிவாளன் அடுத்த பாகத்தை தானே இயக்குவதாக அதிரடி காட்டியுள்ளார் விஷால்.
இதற்கு முதல் காரணம் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கு இடையேயான கருத்து மோதலே ஆகும். மிஷ்கின், பழைய கோபதாபங்களை மறந்து மீண்டும் இணைய தூது விட்ட போதும், விஷால் விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அது மட்டும் இன்றி விஷால் ஏற்கனவே உதவி இயக்குனராகத்தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
ஆக்சன் கிங் அர்ஜுன் அர்ஜுனனின் வேதம் படத்தின் மூலமாக உதவி இயக்குனராக அறிமுகமான விஷால் அடுத்து தயாரிப்பாளரின் தயவால் செல்லமே என்ற திரைப்படத்தில் நடிகனாக பிரபலமானார். மீண்டும் துப்பறிவாளன் மோதலின் போது விஷாலினுள் இருந்த பழைய இயக்குனர் வெளியே வந்திருக்கிறார்.
இதற்கிடையே ஹரியின் ரத்தினம் படத்தில் நடித்த முடித்த விஷால், தான் இயக்கவிருக்கும் துப்பறிவாளன் 2 படத்திற்காக பல குழுவினருடன் லண்டன் விரைந்துள்ளார். மிஷ்கினுடன் சண்டை போட்டு வீராப்பாக பேசியபோதும் ஸ்கிரிப்ட்டில் பல நாட்களாக தடுமாறி இருந்த விஷால், சொன்ன வாக்கை காப்பாற்றும் நோக்கில் குருட்டு தைரியத்துடன் களமிறங்கியுள்ளார். இதனால் என்ன நிகழப் போகிறதோ தெரியவில்லை. வாயாலயே வாங்கி கட்டிக் கொள்ளும் விஷால், அவரது குரு ஆக்சன் கிங் அர்ஜுனனின் பெயரை கெடுக்காமல் இருந்தால் சரிதான்.