பூனைக்கு இனிப்பான எந்த உணவின் சுவையும் தெரியாது. மனிதர்களால் 5 அல்லது அதற்கு மேற்பட்ட சுவைகளை உணரமுடியும். ஆனால், பூனைகளால் இனிப்புச்சுவையை மட்டும் உணர முடியாது. வீட்டுப்பூனை மட்டுமல்ல, காடுகளில் வாழும் பூனைகள் அனைத்துக்கும் இது பொருந்தும். சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன. பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன. அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது. பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.
பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது.
பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கப்படும். பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை.பாலூட்டிகள் மற்றும் பறவைகளைச் சேர்ந்த 33 இனம் பூனைகளால் அழிந்துள்ளது. மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று.