‘Bubble Wrap ‘பேப்பர் கையில் கிடைத்தால் உடைத்து விளையாடாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? உண்மையில் அந்த ‘Bubble Wrap’ பேப்பர், Packing செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டதல்ல. 1957ஆம் ஆண்டு நியூ ஜெர்சியைச் சேர்ந்த Al Fielding, Marc Chavannes என்ற இரு விஞ்ஞானிகள், சுவர்களில் ஒட்டி வடிவமைப்பு செய்யக்கூடிய ேவால்பேப்பராகத்தான் முதன் முதலில் ‘bubble wrap’ பேப்பரை வடிவமைப்புசெய்தனர்.
இரண்டு ப்ளாஸ்டிக் பேப்பரை ஒன்றின்மேல் ஒன்று ஒட்டி அதிலிருக்கும் சின்னச்சின்ன காற்றுப்பைகளை உருவாக்கிய அந்த ேவால்பேப்பரின் வடிவம் பெரிதாக எடுபடவில்லை. கொஞ்சம் யோசித்த விஞ்ஞானிகள் இருவரும் ேவால்பேப்பரை Packing செய்யப் பயன்படும் பேப்பராக மாற்றி வெற்றிபெற்றனர்.
IBM நிறுவனம் தன் முதல் டெஸ்க்டொப் கம்யூட்டரை விற்கத்தொடங்கியபோது, அவற்றை Packing செய்ய ‘bubble wrap’ பேப்பரை உபயோகிக்கத் தொடங்கியது தான் இவர்களின் முதல் பெரிய வெற்றி.