ஏர் ஃபிளிக் புரொடக்ஷன் தயாரிக்கும் படம் ‘டபுள் டக்கர்’. இதில், தீரஜ் நாயகனாக நடிக்கிறார். ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடிக்கும் இதில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனிஷ்காந்த், சுனில் ரெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். கவுதம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஃபேன்டஸி காமெடி படமான இதை அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பா க நடந்து வருகின்றன. இதன் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.“இந்தப் படத்தில், 2 அழகான அனிமேஷன் கதாபாத்திரங்கள் நாயகன் தீரஜுடன்இணைந்து நடிக்கின்றன. இது பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும்” என்கிறது படக்குழு.