சில நூற்றாண்டுகளுக்கு முன் சொக்ேலட் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், சொக்ேலட்கள் வயிற்றுவலிக்கான மருந்தாக உபயோகப்படுத்தப்பட்டன. சொக்ேலட் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமடைவதாக மக்களும் நம்பினார்கள்.
சொக்ேலட்டில் இருக்கும் Theobromine என்ற வேதிப்பொருளும் காஃபியில் இருக்கும் Caffeineனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இதில் சொக்ேலட்டில் இருக்கும் Theobromine, நரம்பு மண்டலத்தையும், இரத்த ஓட்டத்தையும் தூண்டக்கூடியது. இதனால்தான் இதை சாப்பிட்டவுடன் இரத்த அழுத்தத்தில் கொஞ்சம் மாறுதல் இருக்கும். நாய், குதிரை போன்ற விலங்குகளுக்கு மனிதர்களைப் போல் Theobromine வேதிப்பொருளை ஏற்றுக்கொள்ளும் உடலமைப்பு கிடையாது. சொக்ேலட் சாப்பிடும் நாய்கள் இறந்துவிடும் அபாயம் அதிகம்.