ஒரு ஜெட் விமானத்தின் இயந்திரத்தில் இருந்து வரும் சத்தத்தை விட அதிகம் சத்தம் எழுப்பும் மீனினங்கள் உள்ளன என்பது நம்ப முடியாத காரணியாக உள்ளது. Pistol Shrimp எனப்படும் இறால் மீன் வகை மூன்றிலிருந்து ஐந்து சென்டிமீற்றர் நீளமே வளரக்கூடியது. ஆனால், இந்த வகை மீன்கள் எழுப்பும் சத்தமோ மிக அதிகம்.
இவற்றின் இரண்டு நக்ங்களீல் (கொடுக்கு) ஒன்று மட்டும் பெரிதாக இருக்கும். இந்தப்பெரிய நகத்தில், பின் பக்கம் நகரக்கூடிய சுத்தியல் போன்ற பகுதி ஒன்றும், நகர முடியாத அடிப்பகுதி ஒன்றும் இருக்கின்றன. இதில் சுத்தியல் போன்ற பகுதி வேகமாக மற்றொரு பகுதியுடன் மோதும்போது மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் தண்ணீரை வெளியே தள்ளுகின்றன. இந்தச் செயலால் தண்ணீரில் ஏற்படும் நீர்க்குமிழிகள் உடையும்போது தான் ஜெட் எஞ்சினை விட அதிக அளவில் சத்தம் வருகின்றன. மிருகக்காட்சி சாலைகளில் இருக்கும் பெரிய பெரிய மீன் தொட்டிகள் கூட இந்தச் சத்தத்தால் உடைந்துவிடும்.