ஒரு மனிதருக்கு 68 வருடங்கள் தொடர்ச்சியாக விக்கல் நிற்காமல் வந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு விக்கல் வந்தாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. Charles Osborne என்ற அமெரிக்கருக்கு 1922ஆம் ஆண்டு வந்த விக்கல் 1990ஆம் ஆண்டு வரை நிற்கவே இல்லை.
1922ஆம் ஆண்டில் அதிக எடையுள்ள பன்றி ஒன்று அவர் மேல் விழுந்தபோது ஆரம்பித்திருக்கிறது இந்த விக்கல். அன்றிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 நொடிக்கும் ஒருமுறை விக்கல் வருமாம்.
அறுவை சிகிச்சை, ஹார்மோன் தெரபி என என்னென்னவோ செய்து பார்த்தும் இது நிற்கவேயில்லை. 1990ஆம் ஆண்டு அவருடைய 97ஆம் வயதில் தானாகவே விக்கல் நின்றுவிட்டது. ஆனால் விக்கல் இல்லாமல் அவரால் உயிர்வாழ முடியவில்லையோ என்னமோ அதன் பிறகு ஒரே ஒரு ஆண்டு தான் அவர் உயிர் வாழ்ந்துள்ளார்.