62
இரு புறத்து வேலிகள்
நடுவே
அமைந்துள்ள
வீட்டின் யன்னல்கள்
திறந்து
கிடக்கின்றன.
உள் நுழையும்
முன் கதவை
காற்று
மூடித்திறக்கிறது.
ஆரவாரமற்று
உறங்கிக்கிடக்கும்
அந்த அமைதியை
பார்த்திட
தடுத்து
நிறுத்தியது மனசு
பாதங்களை
மெல்ல மெல்ல
நகர்த்தி
உள்ளே செல்ல
எத்தனிக்கிறேன்.
முதுகுக்குப் பின்னால்
ஓடி வந்து என்னை
கட்டித் தழுவும்
அழகியதோர்
குரலின் ஈர்ப்பில்
திரும்பிச் செல்கிறேன்.
அந்தக்
குரலுக்குச்
சொந்தமானவள்
இந்த நிலத்திற்குச்
சொந்தமானாள்
என்னை விட்டும்!