பொங்கலடா நமது
பொங்கல்
போகி பொங்கல்
என மகிழ்வாய்
பங்கமிலா
பொங்கலடா
பால் பொங்கி
கொண்டாடுவாய்
திங்களாக வந்
தெம்மை
திகைக்க வைக்கும்
பொங்கலடா
மங்கையின் வாழ்வில்
ஒளிபெறவே
மகிழ்ச்சி தரும்
பொங்கலடா
தை பிறந்திடவே
தரணி சிறந்திட
தழைத்தோங்கி
வந்த பொங்கலடா
உண்மை உயர்ந்திட
உயர்வு பெற்றிட
உழைத்து வாழச்
சொல்லும் பொங்கலடா
வண்மை ஒழிந்திட
வான்மழை பொழிந்திட
வாழவைக்கும் பொங்கலடா
தன்மை தழைத்திட
தாய்மை தளிர்த்திட
தரணி சிறக்க வந்த
பொங்கலடா
பெண்மை பெற்றிட
பேருண்மை பொழிந்திட
பெற்றோர் மகிழும்
பொங்கலடா
உழுவோர் உழைத்திட
உண்மைகள் வாழ்ந்திட
உழைப்போர் போற்றிடும்
பொங்கலடா
பிழைப்போர் பிறந்திட
பிள்ளை பிறந்திட
பிறந்ததடா உண்மை
பொங்கலடா
திளைப்போர் திளைத்திட
தீந்தமிழ் உயர்ந்திட
திக்கெட்கும் ஓங்கும்
பொங்கலடா
ஏழைகள் எழுந்திட
ஏற்றங்கள் கண்டிட
ஏழ்மை ஒழிக்கவந்த
பொங்கலடா