கிராமத்தில் வசிக்கும் ஐந்து வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வைத்து உருவாகி இருக்கும் படம், ‘செவப்பி’. இதை ராஜேஷ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரன் தயாரித்துள்ளனர். எம்.எஸ்.ராஜா எழுதி இயக்கியிருக்கிறார். பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், ராஜாமணி பாட்டி, ஷ்ரவன் அத்வேதன், டில்லி, செபாஸ்டியன் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். மனோகரன் எம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.பிரவீன் குமார் இசை அமைக்கிறார்.
ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான் சிறுவன். ஒரு கட்டத்தில் அதைப் பிரிய நேரிடுகிறது. இதனால் ஒன்றாக வாழும் அந்தக் கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது கதை. கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜன. 12-ம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் நேரடியாக வெளியாகிறது.