55
நடிகை பிரியா பவானி சங்கர், அருள் நிதியுடன் நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ விரைவில் வெளியாக இருக்கிறது. ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் ‘ரத்னம்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சத்யதேவின் 26 வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கோபிசந்த் நடிக்கும் ‘பீமா’ படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சத்யதேவுடன் நடிக்கும் படத்துக்காக அவர் வெளிநாடு சென்றுள்ளார். இத்தாலி அருகில் உள்ள பதானியாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம் 15-ம் திகதி வரை அங்கு படப்பிடிப்பு நடப்பதாகக் கூறப்படுகிறது.