Home » இலங்கை கிரிக்கெட் அணிக்கு டயலொக் அனுசரணை

இலங்கை கிரிக்கெட் அணிக்கு டயலொக் அனுசரணை

by Damith Pushpika
January 7, 2024 6:00 am 0 comment
டயலொக் ஆசியாட்டா பிஎல்சியி வர்த்தக நாமம் மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க, டயலொக் ஆசியாட்டா பிஎல்சியி குழும சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார, டயலொக் ஆசியாட்டா பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டீ சில்வா, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார கௌரவ அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார செயலாளர் கே. மஹேசன், இலங்கை கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தல் தலைவர் உபுல் நவரத்ன ஆகியோரை காணலாம்.

இலங்கையின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா (Dialog Axiata), இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களாக தமது ஆதரவினை இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுக்காக விரிவுபடுத்தியுள்ளது .

கடந்த ஒரு தசாப்தமாக இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு வகைகளில் பங்களிப்புச் செய்து வருகின்ற டயலொக் ஆசியாட்டா நிறுவனம் மீண்டும் ஒரு தடவை தேசிய கிரிக்கெட் அணிக்கு அனுசரணையாளர்களாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

டயலொக் ஆசியாட்டா நிறுவனமானது இலங்கை கிரிக்கெட் அணியின் அனுசரணையாளர்களாக மாறிய விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்த ஆதரவானது எண்ணற்ற வாய்ப்புக்கள் உருவாக வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டதோடு, டயலொக் நிறுவனம் கடந்த காலங்களில் இலங்கையின் விளையாட்டு வளர்ச்சியடைய பல்வேறு வழிகளில் உதவியிருந்ததையும் நினைவு கூர்ந்திருந்தார். டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) காணப்படும் சுபு வீரசிங்க புதிய அனுசரணை குறித்து கருத்து வெளியிட்டிருந்த போது, இலங்கை கிரிக்கெட்டுக்கு தாம் வழங்கும் இந்த ஆதரவு மூலம் நீண்ட காலமாக இலங்கை கிரிக்கெட்டுக்கு பங்களிப்புச் செய்திருந்தமையை பெருமையாக கருதுவதாக கூறியிருந்தார்.

டயலொக் நிறுவனமானது இலங்கை கிரிக்கெட் அணி மாத்திரமின்றி இலங்கை வலைப்பந்து, கரப்பந்து மற்றும் ஈ–ஸ்போர்ட்ஸ் (E- Sports) ஆகிய அணிகளுக்கும் அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதோடு தேசிய அளவில் நடைபெறுகின்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளுக்கும் தங்களது பங்களிப்பினை வழங்கியிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்கது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division