2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரஜினியின் ‘லால் சலாம்’ படம் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் எக்கச்சக்கமான வெயிட்டிங்கில் இருந்தனர். இந்நிலையில்லைகா நிறுவனம் தனது தயாரிப்பில் இருக்கும் மற்றொரு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் இடையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பொங்கலை குறி வைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாவது வழக்கம். தொடர்ச்சியான விடுமுறையை கணக்கில் கொண்டு படங்கள் வெளியாகும். அதிலும் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் கட்டாயமாக வெளியாகும். அந்த வகையில் இந்தாண்டு பொங்கலை குறி வைத்தும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.ரஜினியின் ‘லால் சலாம்’ படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலன்று ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதால் இப்படம் ரஜினி படமாகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘அயலான்’ படமும் பொங்கலன்று ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமாரின் இரண்டாவது படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் ஏலியன் சயின்ஸ் பிக்சன் படமாக அயலான் உருவாகியுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்கள் இடையில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதே போல் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படமும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகவுள்ளது. ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் மூன்றாவது படைப்பாக உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க போரை மையப்படுத்தி உருவாகியுள்ளது. தனுஷ் இப்படத்தில் இலங்கையை சார்ந்த போராளியாக நடித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படத்தினை ரிலீஸ் செய்யும் பணிகளில் தற்போது படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பொங்கல் ரேஸில் இருந்து ‘லால் சலாம்’ படம் விலகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்டிப்பாக இப்படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அத்துடன் ‘அயலான்’ படம் ரிலீஸ் ஆவதிலும் சிக்கல் தொடர்ந்து வருகிறது. மேலும், சுந்தர் சியின் ‘அரண்மனை 4’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை.
ஏ.எல் விஜய் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் இந்த் ஆண்டு பொங்கலுக்கு வெள்யாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. லால் சலாமுக்கு பதிலாக பொங்கல் ரேஸில் பிரபல நடிகரின் படம்