ஒரு காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படங்கள் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அவருடைய படங்கள் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டி வந்ததால் தயாரிப்பாளர்கள் நயன்தாராவின் கால்ஷுட்டுக்காக காத்திருந்தனர். இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.அதாவது திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் சரிய தொடங்கிவிட்டது. பெரிய அளவில் அவரது படங்கள் வசூல் செய்யாத நிலையில் சமீபத்தில் அன்னபூரணி என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு ஓரளவு நல்ல விமர்சனம் கிடைத்திருந்தாலும்
சமீபத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான கான்ஜுரிங் கண்ணப்பன் படம் நயன்தாரா படத்தின் முதல் நாள் கலெக்ஷனை விட அதிகம் பெற்றிருக்கிறது.
ரெஜினா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. கிட்டதட்ட 80 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.
இப்போது காமெடி நடிகர்கள் ஹீரோ அவதாரம் எடுத்து வரும் நிலையில் நாய் சேகர் படத்தின் மூலம் தான் சதீஷ் கதாநாயகனாக அறிமுகமானார். இந்நிலையில் மீண்டும் கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் மூலம் தனது ஹீரோ அந்தஸ்தை நிலை நிறுத்தி இருக்கிறார். முதல் நாளே இந்த படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது.
அதன்படி இந்த படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடியை தாண்டி கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சதீஷின் படத்திற்கு இப்படி ஒரு ஓபனிங்கா என பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். நயன்தாராவையே இதன் மூலம் சதீஷ் ஓரம் கட்டிவிட்டார்.