மேற்கு அவுஸ்திரேலியாவின் மத்திய தீவில் பிங்க் லேக் ஹில்லியர் (lake hillier) அமைந்துள்ளது. இதன் நீளம் 600 மீற்றர், அகலம் 250 மீற்றராகும். நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள அனைத்து பக்கங்களிலும், ஏராளமான பசுமையான யூக்கலிப்டஸ் மரங்கள் சூழ்ந்துள்ளது.
ஏரியானது கடலுடன் சேராவண்ணம் மணல் திட்டுக்கள் ஏரியையும், கடலையும் பிரிக்குமாறு அமைந்துள்ளது.
மேற்பரப்பில் இருந்து பார்க்கும்போது லேக் ஹில்லியரின் இளஞ்சிவப்பு நிறம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த ஏரி அவுஸ்திரேலியாவில் உள்ள தெற்கு பெருங்கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
இந்த ஏரிக்கும், கடலுக்கும் 10 மீற்றர் மட்டுமே இடைவெளி இருக்கும். மேலும், இந்த நீரை கையில் எடுத்து பார்த்தாலும் இளஞ்சிவப்பு நிறமாகவே காணப்படும்.