இலங்கையில் உள்ள வியட்நாம் தூதரகத்துடன் இணைந்து வியட்நாமின் வின் லாங் மாகாணம் அண்மையில் கொழும்பில் கிராண்ட்பெல் ஹோட்டலில் வர்த்தக மாநாட்டை நடத்தியது.
வியட்நாமின் வின் லாங் மாகாணத்துக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து இந்நிகழ்வு கவனம் செலுத்தியது.
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஜில்மா தஹநாயக்க, வர்த்தக திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி ஷிவந்தி அபேரத்ன, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தேசிய வர்த்தக சபையின் உறுப்பினர்கள் மற்றும் வணிக சங்கத்தின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு வின் லாங் மாகாணத்தின் வர்த்தக ரீதியான பலங்களை எடுத்துக் காட்டியதுடன், பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இருதரப்பு உறவுகளை வளர்ப்பதன் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
பங்கேற்பாளர்கள் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான யோசனைகளை முன்வைத்தனர்.
ருஸைக் பாரூக்