சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் பான் இந்தியா படமாக வருகிறது. அதாவது ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உருவாகும் படம் அந்த மொழியில் மட்டும் தான் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அதாவது சாதாரணமாக ஒரு படம் உருவானால் ஐந்து மொழிகளில் வெளியிடப்படுகிறது.இப்போது ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ படங்களும் பான் இந்திய படமாக தான் வெளியானது. அதேபோல் பாலிவுட்டில் ஜவான் படமும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இப்போது அதேபோல் தான் மணிரத்தினம் மற்றும் கமல் கூட்டணியில் தங் லைஃப் படமும் ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.இதுவரை மணிரத்தினத்தின் படங்களை எடுத்துக் கொண்டால் தமிழில் தான் டைட்டில் வைக்கப்படும். பொன்னியின் செல்வன் படத்திற்கும் அப்படி வைக்கப்பட்ட நிலையில் மற்ற மொழிகளில் PS1, PS2 என ஆங்கில மொழியில் பொன்னியின் செல்வன் படத்தை குறிப்பிட்டு இருந்தனர். அதேபோல் கமலும் இதுவரை தமிழ் பெயர் தான் டைட்டிலை வைத்து வந்தார்.
ஆனால் இப்போது முதல் முறையாக ஆங்கிலத்தில் தங் லைஃப் என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை மணிரத்தினம் வெளியிட்டு இருக்கிறார். அதுவும் கிட்டத்தட்ட 40 வருட காலமாக மணிரத்தினம் தமிழ் பெயரை மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென இதை உடைப்பதற்கு காரணம் பான் இந்திய படம் என்பதால் தானாம்.
அதாவது ஆங்கில மொழியில் டைட்டில் வைத்தால் மற்ற எல்லா மொழிகளிலுமே வரவேற்பு அதிகமாக இருக்கும். இதனால் தான் இத்தனை வருட காலமாக தமிழ் டைட்டிலை மட்டுமே பயன்படுத்தி வந்த மணிரத்தினம் மற்றும் கமல் இருவரும் கூட்டணி சேர்ந்து தங் லைஃப் என்ற டைட்டிலை வைத்திருக்கிறார்கள்.
இது தமிழ் ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை கொடுத்தாலும் சினிமா என்பது பொழுதுபோக்கை தாண்டி அதுவும் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில் தான். அதனால்தான் இப்போது பெரிய படங்கள் 500 கோடி, 600 கோடி வசூல் செய்து வருகிறது. ஆகையால் தங் லைஃப் படமும் சர்வதேச அளவில் பேசப்படும் படமாக மணிரத்தினம் எடுக்க இருக்கிறார்.