முதற்தடவையாக Global Innovation Challenge என்ற பெயரில் நடத்தப்படும் உலக புதுமைப் படைப்பு சவாலுக்காக நிதியுதவி பெறும் அமைப்புக்களின் விபரங்களை Citi Foundation அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் குறைந்த வருமானம் பெறும் சமூகங்கள் எதிர்கொள்ளக்கூடிய சமூக பொருளாதார சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்கும் சமுதாய ஸ்தாபனங்கள் இனங்காணப்பட்டு, அவற்றுக்கு கொடையுதவி செய்யும் முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில், Citi Foundation இன் நன்கொடையாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) 50,000 அமெ. டொலர் நிதியுதவியைப் பெற்றது.
இதன்மூலம், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தை அறிமுகப்படுத்தி, சகலதையும் உள்ளடக்கிய நிதி உற்பத்திகள் மற்றும் சேவைகளை பெறக்கூடிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கையில் சிறிய அளவில் விவசாயம் செய்யும் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.
இந்த வேலைத்திட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தித் திறனையும், சமுதாயத்தின் மீண்டெழும் திறனையும் விருத்தி செய்யக்கூடிய சுற்றாடல்-நேய விவசாய தொழில்நுட்பங்கள் போதிக்கப்படவுள்ளன.
UNDP Sri Lanka அடங்கலாக நிதியுதவி பெறும் ஐம்பது நிறுவனங்களும் முன்னுரிமை அளிக்கப்பட்ட நான்கு துறைகளில் நிகழ்ச்சித் திட்ட உதவிகளைப் பெறவுள்ளன.
நன்கொடை பெற்ற நிறுவனங்கள் இரு வருட காலத்தில் இலாப நோக்கம் அற்று செயற்படும் IDEO.org என்ற இணையவெளி வடிவமைப்பு நிறுவனம் வழங்கும் வசதிகள் ஊடாக ஒரு கற்றல் சமுதாயத்தை அணுகவுள்ளன.