இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் ரிலீசுக்கு பிறகு கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார். அடுத்ததாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தின் வேலைகளை தொடங்கியிருக்கிறார் லோகேஷ். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஒரு மலையாள நடிகரிடமும் அணுகியிருக்கிறாராம்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு, கைதி, மாஸ்டர், விக்ரம் இப்போது லியோ என எடுத்த அனைத்து படங்களிலுமே வெற்றி கண்டுள்ளார். அந்த விதத்தில், சூப்பர்ஸ்டாருடன் லோகேஷ் இணைந்துள்ளார்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் மற்றும் லோகேஷின் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானது.லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் சொன்னதை போலவே, சூப்பர்ஸ்டாரின் பட வேலைகளை தொடங்கியிருக்கிறார். தலைவர் 171 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகிறது. இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தலைவர் 171 படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவிருக்கிறார். மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.தற்போது, இயக்குனர் ஞானவேல் இயக்கும் தலைவரின் 170வது படத்தில் நடித்துவருகிறார் சூப்பர்ஸ்டார். இந்த படத்தின் பூஜை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த தலைவர் 170 படத்தில் மாபெரும் நடிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த படம் கேரளா மற்றும் கன்னியாகுமரி வட்டாரங்களில் எடுக்கப்பட்டுவருகிறது. தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. லியோ படத்தில் தளபதி விஜயை வேற லெவலில் காட்டியிருக்கிறார் லோகேஷ். லியோ படத்தின் வரவேற்ப்பினால் ரசிகர்கள் லோகேஷின் அடுத்த படங்கள் குறித்த கேள்விகளை எழுப்பிவருகின்றனர். லோகேஷின் ரோலக்ஸ் கதாபாத்திரம் மாபெரும் ஹைப்பில் இருப்பதால் அந்த படம் குறித்த கேள்வியும், தலைவரின் 171வது படம் குறித்த கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் வலம்வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. மலையாள நடிகரை அணுகியிருக்கிறாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் இந்த நடிகர் இப்போது சலார் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். தமிழில் மொழி, நினைத்தாலே இனிக்கும் ராவணன் போன்ற படங்களில் நடித்த நடிகர் பிரிதிவிராஜ் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அணுகியிருக்கிறாராம் இயக்குனர் லோகேஷ். அதற்கு அவர் ஓகே சொல்லியிருக்கிறாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இந்த படத்தில் அவர் நடித்தால், தமிழ் சினிமாவில் ஃபகத் ஃபாசில் பெற்ற பிரபலத்தை பெறுவார் என்கிறார்கள் திரை வட்டாரங்கள்.