தமிழ் சினிமாவில் 80 களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ராதா. இவரது மூத்த மகளான கார்த்திகா ‘கோ’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். ஜீவா ஜோடியாக இப்படத்தில் ‘என்னமோ ஏதோ’, ‘அமுலி துமிலி’ பாடல்களில் ரசிக்க வைத்தார். இப்பாடலின் மூலமாக இன்றும் ரசிகர்களின் நியாபகத்தில் இருக்கிறார். இந்நிலையில் கார்த்திகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர், நடிகைகள் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் 80 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ராதா. அவரின் மகளான கார்த்திகாவும் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்நிலையில் கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.ராதிகாவின் மூத்த மகளான கார்த்திகா ‘கோ’ படம் மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படமே கார்த்திகாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருக்கிறது.
‘கோ’ படத்தினை தொடர்ந்து அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள கார்த்திகா, தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் தனது வருங்கால கணவரை கட்டிப்பிடித்தபடி மோதிரம் அணிந்த படி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதன் மூலமாக அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் கார்த்திகாவின் திருமணாம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அத்துடன் அவரது வருங்கால கணவர் பற்றிய தகவலையும் தனது பதிவில் வெளியிடவில்லை கார்த்திகா.கார்த்திகாவின் சகோதரியான துளசியும் சில படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் ‘யான்’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தார் துளசி. இந்நிலையில் சத்தமே இல்லாமல் கார்த்திகாவிற்கு தற்போது நிச்சயம் நடந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.