அனைவராலும் அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட ஹெவ்லொக் சிட்டி மோல் 2023 ஒக்டோபர் 19ஆம் திகதி பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த சர்வதேச தரத்திலான ஷொப்பிங் கட்டடத்தொகுதி நிகரற்ற ஷொப்பிங் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க, மிகப்பொருத்தமான ஒரு இடத்தை கொழும்பின் முக்கிய இடத்தில் உருவாக்கியுள்ளது.
200,000 சதுர அடிக்கு மேல் பரந்து காணப்படும் ஹெவ்லொக் சிட்டி மோல் ஒரு விற்பனையக சொர்க்கமாகும், இங்கு Odel, காகில்ஸ் ஃபுட் ஹோல், ஸ்கோப் சினிமாஸ், ஃபுட் ஸ்டுடியோ, கூல் பிளானட் மற்றும் அபான்ஸ் உள்ளிட்ட ஆறு முதன்மை விற்பனையகங்கள் உள்ளன. மேலும், 132 ஏனைய விற்பனை நிலையங்களும் இருப்பதோடு, அவை இணையற்ற ஃபேஷன் மற்றும் அணிகலன் தெரிவுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மதிமயக்கும் உணவு மற்றும் பானங்கள், வசதி சேவைகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபகரணங்கள், மற்றும் பரிசுகள் மற்றும் புதுமையான அம்சங்களைப் பெற்றுத் தருகின்றன.
உணவுப் பிரியர்களைப் பொறுத்தவரை ஹெவ்லொக் சிட்டி மோல் வழங்கும் தெரிவுகளை ஒரு சமையற்கலை சாகசப் பயணம் என்று சொல்லலாம். 30க்கும் மேற்பட்ட விசேட உணவகங்கள், துரித சேவை இடங்கள், கஃபே, மற்றும் ஸ்போர்ட்ஸ் பார்கள் இணைந்து வழங்கும் உலகளாவிய உணவு வகைகள் மற்றும் உள்நாட்டு விருப்பத் தெரிவுகள் என அனைத்தும் கிடைக்கும் சிலிர்ப்பூட்டும் food court உடன் உங்களுக்குப் புதியதொரு அனுபவம் கிடைப்பது நிச்சயம்.