533
வீடும்-காடும்
தமிழுக்கு
மிக
நெருக்கமாய்
இருக்கிறது.
புதைக்கப்பட்ட பின்
மனிதர்களை தவிர
மற்றவைகள்-
முளைத்து
விடுகின்றன.
மண்ணை
தோண்டாத வரை
மண்புழுவின் வாழ்வு
நீள்கிறது.
அச்சில்-
சுழல்கிறது
வாழ்வின் தரிசனம்
தடுமாற்றங்களோடு
நிற்காத நதிப்போல்
மாறாத
அலைப்போல்
மயங்கி விழும்
கற்பனைகளோடு- நாம்.!
வாழ்க்கை
எல்லா சதிகளோடும்
சம்பந்தப்பட்டு விடுகிறது-
வாழ்வதற்காய்.
விழித்து விடும்
உலகத்தோடு
ஒட்டிக் கொள்ள.