மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நடிகை லட்சுமி மேனன். சமீபத்தில் இயக்குனர் பி. வாசுவின் சந்திரமுகி 2 படத்தில் நடித்து கம் பேக் கொடுத்திருக்கிறார். அவர் சினிமா மட்டுமல்லாது அவரது சமூக வலைத்தளத்திலும் கம் பேக் கொடுத்திருக்கிறார். சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை லக்ஷ்மி மேனன். அவரது முதல் படமான சுந்தர பாண்டியன் நல்ல வரவேற்பை பெற்றது. கும்கி படமும் நல்ல வெற்றி படமாக அமைந்தது. தனது 8ஆம் வகுப்பில் சினிமாவில் நடிக்க தொடங்கினார் லக்ஷ்மி மேனன். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
சசிகுமாருடன் இரண்டாவது முறையாக குட்டி புலி படத்தில் நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து மஞ்சப்பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், மிருதன், றெக்க, வேதாளம், புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் நடித்தார். வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கச்சியாக நடித்தார். தொடக்கத்தில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்த இந்த நடிகைக்கு அதன் பிறகு வாய்ப்பு மிகவும் குறைந்தது.அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் நடன வீடியோ, போட்டோஸ் என பதிவிட்டு வந்தாலும் அவருக்கான கவனம் சினிமாவில் கிடைக்கவில்லை. அதனால் புலிக்குத்தி பாண்டி படத்திற்கு பிறகு ஆள் அட்ரஸே இல்லாமல் இருந்துவிட்டார் நடிகை லக்ஷ்மி மேனன். மேலும், சினிமா வாய்ப்பு அதிகமாக கிடைக்கப்பெறாததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லுவார் எனவும் முந்தய சீசன்போது கூறப்பட்டது. அதற்கும் பதிலளிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டார் லக்ஷ்மி மேனன்.இந்நிலையில், ஜோதிகாவின் மார்க்கெட்டை உயர்த்திய சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு லக்ஷ்மி மேனனுக்கு கிடைத்தது. ஆரம்பத்தில், எதற்கு லக்ஷ்மி மேனன் இப்படியொரு சின்ன மற்றும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என நினைக்கும்போதுதான், இவர்தான் அந்த சந்திரமுகி என்னும் காட்சி வந்திருக்கும். சந்திரமுகி 2 படத்தில் இவரின் உடம்பில் தான் அந்த ஆவி இருக்கும். நடிப்பில் சிறப்பாக செய்திருப்பார் லக்ஷ்மி மேனன். அந்த வகையில், சினிமாவில் கம் பேக் கொடுத்துவிட்டார் என ரசிகர்கள் கூறிவந்தார்.இந்நிலையில், சமூக வலைத்தளத்திலிருந்து விலகியிருந்த இவர் இன்ஸ்டாகிராம் DPயம் வைக்காமலேயே இருந்தார். ஆனால், இப்போது லக்ஷ்மி மேனன் மீண்டும் ஆக்டிவாகியிருக்கிறார். கிட்டத்தட்ட 64 வாரங்களுக்கு பிறகு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்திருக்கிறார். அதுவும் அழகான சேலையில் அந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் குஷியாகியிருக்கிறார்கள். ஒரு வேலை, சந்திரமுகி 2 படத்தின்மூலம் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் அந்த பதிவோடு கம் பேக்கை ஆரம்பித்திருக்கிறாரோ எனவும் கெலியெழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.64 வாரத்திற்கு பிறகு மீண்டும் வந்திருக்கும் லக்ஷ்மி மேனன்.